தந்தை மரணம்: பொலிஸ் காவலில் நளினி விடுவிப்பு

தந்தை மரணம்: பொலிஸ் காவலில் நளினி விடுவிப்பு

தந்தை மரணம்: பொலிஸ் காவலில் நளினி விடுவிப்பு

எழுத்தாளர் Bella Dalima

24 Feb, 2016 | 4:36 pm

இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலைவழக்கில் சிறையில் வைக்கப்பட்டுள்ள நளினி, அவரது தந்தையின் இறுதிக்கிரியைகளில் கலந்துகொள்வதற்காக பொலிஸ் காவலில் வெளியில் அனுப்பப்பட்டுள்ளார்.

நளினி கடந்த 25 வருடங்களாக வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரது பெற்றோர் நெல்லை மாவட்டத்தில் வசித்து வந்தனர்.

இந்நிலையில், 91 வயதான நளினியின் தந்தை நேற்று மாலை காலமானார்.

இன்று மாலை இடம்பெறும் இறுதிக்கிரியைகளில் பங்குபற்றுவதற்காகவே நளினிக்கு பொலிஸ் காவலில் சென்று வர அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் நளினி மற்றும் அவரது கணவர் முருகன் உள்ளிட்ட 7 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்