ஜனாதிபதியைச் சந்தித்தார் நியூசிலாந்து பிரதமர்: உடன்படிக்கைகள் சில கைச்சாத்திடப்பட்டன

ஜனாதிபதியைச் சந்தித்தார் நியூசிலாந்து பிரதமர்: உடன்படிக்கைகள் சில கைச்சாத்திடப்பட்டன

எழுத்தாளர் Bella Dalima

24 Feb, 2016 | 8:59 pm

உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள நியூசிலாந்து பிரதமர் ஜோன் கீ இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார்.

தற்போதைய தலைமைத்துவத்தின் கீழ் சர்வதேச மற்றும் தேசிய மட்டத்தில் இலங்கை புதிய இலக்கை நோக்கி பயணித்துக் கொண்டிருப்பதாகவும் சர்வதேசம் ஏற்கும் சிறந்த தலைவராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திகழ்வதாகவும் நியூசிலாந்து பிரதமர் ஜோன் கீ இதன்போது தெரிவித்துள்ளார்.

நாட்டிற்கு வருகை தந்துள்ள நியூசிலாந்து பிரதமர் ஜோன் கீ யை வரவேற்கும் உத்தியோகப்பூர்வ நிகழ்வு ஜனாதிபதி செயலக வளாகத்தில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது.

இதன்போது நியூசிலாந்துப் பிரதமருக்கு இராணுவ அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.

அதன் பின்னர் பிரதமர் மற்றும் அமைச்சர்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.

இந்த நிகழ்வின் பின்னர் ஜனாதிபதி மற்றும் நியூசிலாந்துப் பிரதமருக்கிடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தை ஆரம்பமானது.

இதன்போது இரண்டு நாடுகளுக்கும் இடையில் சில உடன்படிக்கைகளும் கைச்சாத்திடப்பட்டன.

அத்துடன், நந்தி எனப்படும் யானைக்குட்டி நியூசிலாந்திற்குப் பரிசாக வழங்கப்பட்டதுடன், அது தொடர்பிலான ஆவணத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியூசிலாந்துப் பிரதமரிடம் கையளித்தார்.

இதேவேளை, நியூசிலாந்துப் பிரதமர் இன்று மதியம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்