உள்ளுராட்சி மன்றங்களின் எல்லை நிர்ணயம் குறித்து 1000 இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள்

உள்ளுராட்சி மன்றங்களின் எல்லை நிர்ணயம் குறித்து 1000 இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள்

உள்ளுராட்சி மன்றங்களின் எல்லை நிர்ணயம் குறித்து 1000 இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள்

எழுத்தாளர் Staff Writer

24 Feb, 2016 | 9:08 am

உள்ளுராட்சி மன்றங்களின் எல்லை நிர்ணயம் தொடர்பில் மக்களின் முறைப்பாடுகள் மற்றும் மேன்முறையீடுகளை கண்டறியும் ஐவர் கொண்ட குழுவிற்கு 1000 இற்கும் அதிகமான முறைப்பாடுகள் முன் வைக்கப்பட்டுள்ளன.

அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புகள், தேர்தல்கள் கண்கானிப்பு குழு மற்றும் மக்களிடம் இருந்து முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

1000 இற்கும் அதிகமான பிரிவுகளில் இருந்து 2000 ற்கும் அதிகமான முறைப்பாடுகள் குறித்த குழுவிற்கு கிடைக்கப் பெ்ற்றுள்ளது.

இதுவரையில் கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக
மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

விசாரணைகளின் முடிவுகள் தொடர்பான அறிக்கை எதிர்வரும் ஏப்ரல் மாதம் குறித்த அமைச்சிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

எதிர்வரும் ஜூலை மாதம் உள்ளுராட்சிமன்ற தேர்தல்கள் நடத்துவதை இலக்காக கொண்டே இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்