இலஞ்ச ஊழல் தொடர்பில் மேலும் இரண்டு சுங்க உத்தியோகத்தர்கள் கைது

இலஞ்ச ஊழல் தொடர்பில் மேலும் இரண்டு சுங்க உத்தியோகத்தர்கள் கைது

இலஞ்ச ஊழல் தொடர்பில் மேலும் இரண்டு சுங்க உத்தியோகத்தர்கள் கைது

எழுத்தாளர் Bella Dalima

24 Feb, 2016 | 5:36 pm

சுங்கத் திணைக்களத்தில் இடம்பெற்ற பாரிய இலஞ்ச ஊழல் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இரண்டு சுங்க உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலஞ்ச ஊழல் தொடர்பில் இவ்விருவரும் கைது செய்யப்பட்டதாக  இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தில்ருக்‌ஷி டயஸ் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.

வாகன உதிரிப்பாக இறக்குமதியாளர் ஒருவரை சுங்கக் கட்டணங்களில் இருந்து விடுவிப்பதற்காக, 12.5 மில்லியன் ரூபா இலஞ்சம் பெற்றுக்கொண்ட மூன்று சுங்க அதிகாரிகள் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.

இதற்கமைய,  நாட்டின் சுங்கத் திணைக்களத்தில் இடம்பெற்ற பாரிய இலஞ்ச ஊழல் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சுங்க உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை ஐந்தாக அதிகரித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்