அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட 16 இலங்கையர்கள் கைது 

அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட 16 இலங்கையர்கள் கைது 

அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட 16 இலங்கையர்கள் கைது 

எழுத்தாளர் Bella Dalima

24 Feb, 2016 | 5:45 pm

புகலிடம் கோரி சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவினுள் பிரவேசித்த 16 இலங்கையர்கள் அங்கிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

நாட்டை வந்தடைந்த பின்னர் அவர்களை இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் கைதுசெய்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டது.

இந்த புகலிடக் கோரிக்கையாளர்கள் 2012 ஆம் ஆண்டில் சட்டவிரோத படகுப் பயணம் மேற்கொண்டு அவுஸ்திரேலியாவிற்கு சென்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

வாழைச்சேனை, உடப்புவ, மட்டக்களப்பு, சிலாபம், வென்னப்புவை, களுவாஞ்சிக்குடி, ஆடிமுனை, ஆராய்ச்சிக்கட்டு மற்றும் நீர்கொழும்பு பகுதிகளைச் சேர்ந்தவர்களே அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்