அரசியலமைப்புத் திருத்தம்: திருகோணமலை அமர்வின் இரண்டாம் நாள் இன்று

அரசியலமைப்புத் திருத்தம்: திருகோணமலை அமர்வின் இரண்டாம் நாள் இன்று

எழுத்தாளர் Staff Writer

24 Feb, 2016 | 6:29 am

திருகோணமலை மாவட்டத்திற்கான அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பாக மக்கள் கருத்தறியும் அமர்வு இரண்டாம் நாளாக இன்றும் நடைபெறவுள்ளது.

இந்த அமர்வு திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நேற்ற ஆரம்பமானது.

இதன்போது பொது மக்கள், சிவில் சமூக பிரதிநிதிகள் மற்றும் அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் தமது கருத்துகளை பதிவு செய்தனர்.

அரசிலமைப்பு சீர்திருத்தத்திற்கான 22 யோசனைகள் நேற்று பதிவுசெய்யப்பட்டன.

60 வயதுக்கு மேற்பட்டோர் அரசியலில் ஈடுபடக் கூடாது, இன விகிதாசார அடிப்படை பேணப்பட வேண்டும் போன்ற யோசனைகளும் இதன்போது முன்வைக்கப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் கூறினார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்