அநுராதபுர சிறைச்சாலையில் தொடரும் தமிழ் கைதிகளின் உண்ணாவிரதம்

அநுராதபுர சிறைச்சாலையில் தொடரும் தமிழ் கைதிகளின் உண்ணாவிரதம்

அநுராதபுர சிறைச்சாலையில் தொடரும் தமிழ் கைதிகளின் உண்ணாவிரதம்

எழுத்தாளர் Staff Writer

24 Feb, 2016 | 9:46 am

அநுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ்க் கைதிகள் இருவர் ஆரம்பித்துள்ள உண்ணாவிரதம் தொடர்ந்தும் மூன்றாவது நாளாக இன்றும் முன்னெடுக்கப்படுகின்றது.

குறித்த கைதிகள் இருவரும் கடந்த திங்கட்கிழமை தமது உண்ணாவிரதத்தை ஆரம்பித்ததாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் பேச்சாளர் துஷார உபுல்தெனிய கூறினார்.

அத்துடன் இவர்கள் தம் மீதான விசாரணைகளை துரிதப்படுத்தக் கோரியே உண்ணாவிரதத்தை முன்னெடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.

அத்துடன் இரண்டு தமிழ்க் கைதிகள் உடல் நலத்துடன் காணப்படுவதாகவும் சிறைச்சாலைகள் திணைக்களத்தின் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.

இரண்டு கைதிகளினதும் கோரிக்ைககள் அடங்கிய மகஜரொன்றை சட்டமாஅதிபரிடம் கையளிக்கவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவிக்கின்றது.

அத்துடன் இன்றைய தினம் உண்ணாவிரதப் போராட்டமொன்றை முன்னெடுக்கப் போவதாக பத்து தமிழ்க் கைதிகள் மெகசின் சிறைச்சாலைகள் நிர்வாகத்துக்கு அறிவித்துள்ளதாக துஷார உபுல்தெனிய குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்