வௌ்ளித் தட்டில் உணவு: ராஜ வாழ்க்கை வாழும் நாய்கள்!

வௌ்ளித் தட்டில் உணவு: ராஜ வாழ்க்கை வாழும் நாய்கள்!

வௌ்ளித் தட்டில் உணவு: ராஜ வாழ்க்கை வாழும் நாய்கள்!

எழுத்தாளர் Bella Dalima

23 Feb, 2016 | 3:11 pm

இங்கிலாந்து ராணி எலிசபெத் (89) தனது நாய்களின் மீது மிகவும் பிரியம் கொண்டவர். தற்போது அவர் 30 உயர்ரக நாய்களை வளர்த்து வருகிறார்.

ராஜ உபசாரத்தில் வளர்க்கப்படும் இந்த நாய்களுக்கு முயல் மற்றும் கோழி இறைச்சிகள் உணவாகக் கொடுக்கப்படுகின்றன. இதில் சிறப்பம்சம் என்னவென்றால், இந்த நாய்களுக்கு வெள்ளித்தட்டில் தான் உணவு வழங்கப்படுகிறதாம்.

முதன் முறையாக ராணி எலிசபெத்துக்கு 18 ஆவது பிறந்த நாளின் போது அவரது தந்தை 4 ஆம் ஜோர்ஜ் மன்னர் மற்றும் தாயார் இணைந்து ‘சூசன்’ என்ற நாய் ஒன்றை பரிசளித்தனர். அதைத் தொடர்ந்து அவர் நிறைய நாய்களை வளர்த்து வருகிறார். இந்த நாய்களை விலங்கு நல மருத்துவரும், தெரப்பி பயிற்சியாளரும் பராமரித்து வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்