வவுனியா மாணவி கொலை: சந்தேகநபர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை

வவுனியா மாணவி கொலை: சந்தேகநபர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை

எழுத்தாளர் Bella Dalima

23 Feb, 2016 | 10:20 pm

வவுனியா – உக்குளாங்குளம் பகுதியில் 13 வயது மாணவி, பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், சந்தேகநபர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.

சம்பவம் தொடர்பில் தொடர்ந்தும் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, இந்த சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், மாணவி கங்காதரன் ஹரிஸ்ணவிக்கு நீதி வேண்டியும் வவுனியா மற்றும் கிளிநொச்சி பகுதிகளில் இன்று கவனயீர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

மூன்று பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தின் இரண்டாவது பிள்ளையான கங்காதரன் ஹரிஸ்ணவி கடந்த 16 ஆம் திகதி தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

பின்னர், அவர் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தமை பிரேதப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்