பேலியகொடை துப்பாக்கிப் பிரயோகம்: சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிப்பு

பேலியகொடை துப்பாக்கிப் பிரயோகம்: சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிப்பு

பேலியகொடை துப்பாக்கிப் பிரயோகம்: சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிப்பு

எழுத்தாளர் Bella Dalima

23 Feb, 2016 | 10:47 pm

பேலியகொடை பிரதேசத்தில் நேற்றிரவு (22) இரண்டு இளைஞர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோக சம்பவம் தொடர்பிலான பிரதான சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபரின் மூத்த சகோதரி கைது செய்யப்பட்டு இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அடுத்த மாதம் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

தனிப்பட்ட தகராறு காரணமாக நேற்றிரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பேலியகொட – போரணுகொடுவத்த பிரதேசத்தில் நேற்றிரவு 9 மணியளவில் இந்த துப்பாக்கிப் பிரயோக சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நபரொருவர் தனது மூத்த சகோதரியுடன் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ள வந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளதென பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது ஒருவரை இலக்குவைத்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ள போதிலும் அவரின் பின்னால் இருந்த இருவரே துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளனர்.

இந்த துப்பாக்கிப் பிரயோகத்தில் போரணுகொடுவத்த பிரதேசத்தைச் சேர்ந்த 14 மற்றும் 21 வயதான இரண்டு இளைஞர்கள் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த இருவரும் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், 21 வயதான இளைஞர் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சம்பவம் தொடர்பில் பேலியகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்