நியூஸ்பெஸ்ட்டின் மற்றுமொரு சேவையான ”மக்கள் சக்தி, இல்லங்கள் தோறும்” நாளை ஆரம்பம்

நியூஸ்பெஸ்ட்டின் மற்றுமொரு சேவையான ”மக்கள் சக்தி, இல்லங்கள் தோறும்” நாளை ஆரம்பம்

நியூஸ்பெஸ்ட்டின் மற்றுமொரு சேவையான ”மக்கள் சக்தி, இல்லங்கள் தோறும்” நாளை ஆரம்பம்

எழுத்தாளர் Bella Dalima

23 Feb, 2016 | 10:44 pm

மக்களின் துயர் அறிந்து, அவர்களின் துயர் துடைக்கும் மற்றுமொரு மக்கள் சேவையை நியூஸ்பெஸ்ட் ஆரம்பித்துள்ளது.

நியூஸ்பெஸ்ட்டின் ”மக்கள் சக்தி, இல்லங்கள் தோறும்” நிகழ்ச்சித்திட்டம் நாளை (24) முதல் ஆரம்பமாகவுள்ளது.

நியூஸ்பெஸ்டின் மக்கள் சக்தி பல்வேறு பிரதேசங்களுக்கும் சென்று மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதில் முன்நின்று செயற்பட்டது.

இம்முறை மக்கள் சக்தி வீடு வீடாகச் சென்று மக்களுடன் கலந்துரையாடி, அவர்களின் பிரச்சினைகளை அடையாளம் கண்டு அவற்றைத் தீர்த்து வைப்பதற்காக செயற்படவுள்ளது.

நாடளாவிய ரீதியில் 25 மாவட்டங்களின் பல பகுதிகளுக்கும் சென்று கிராம மக்களை சந்திப்பதற்கு எமது குழுக்கள் தயாராகவுள்ளன.

நியூஸ்பெஸ்ட்டின் கொழும்பு தலைமை அலுவலகத்தில் இருந்து இன்று காலை மூன்று குழுவினர் அதற்காக புறப்பட்டுச் சென்றனர்.

நாளை காலை 9 மணிக்கு யாழ்ப்பாணம், புத்தளம், மணற்காடு மற்றும் மொனராகலையில் இந்த நிகழ்ச்சித் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

பேராதனைப் பல்கலைக்கழகம் ”மக்கள் சக்தி, இல்லங்கள் தோறும்” நிகழ்ச்சித்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குகின்றது.

நியூஸ்பெஸ்ட்டின் மற்றுமொரு சேவையான ”மக்கள் சக்தி, இல்லங்கள் தோறும்” நாளை ஆரம்பம்

Posted by Newsfirst.lk tamil on Tuesday, February 23, 2016

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்