அரசியலமைப்பு திருத்தம் மீதான விவாதம் தொடர்பான இறுதித்தீர்மானம் இன்று

அரசியலமைப்பு திருத்தம் மீதான விவாதம் தொடர்பான இறுதித்தீர்மானம் இன்று

அரசியலமைப்பு திருத்தம் மீதான விவாதம் தொடர்பான இறுதித்தீர்மானம் இன்று

எழுத்தாளர் Staff Writer

23 Feb, 2016 | 7:09 am

பாராளுமன்றம் இன்று பிற்பகல் கூடவுள்ளது.

சபை அமர்வுகள் இடம்பெற முன்னர் அரசியலமைப்பு திருத்தம் மீதான விவாதத்தை இன்று நடத்துவதா இல்லையா என்பது தொடர்டபில் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் தீர்மானிக்கப்படவுள்ளது.

இன்று முற்பகல் 9 மணியளவில் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இந்தக் கூட்டம் நடத்தப்படவுள்ளது.

எதிர்வரும் 25 ஆம் நடத்தப்படவிருந்த விவாதத்தையே இன்றும் நாளையும் விவாதத்திற்கு எடுத்துக் கொள்வது தொடர்பிலேயே இதன் போது கலந்துரையாடப்படவுள்ளது.

இந்த விவாதத்தை இன்று நடத்துவதற்கு இணக்கம் காணப்படும் பட்சத்தில் விவாதத்தின் இறுதியில் அது குறித்த தீர்மானிக்கப்படவுள்ளது.

இதற்கு முன்னர் இடம்பெற்ற சபை அமர்வுகளின் போது ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் தம்மை சுயாதீன அரசியல் குழுவாக அங்கீகரிக்குமாறு கோரி பாராளுமன்றத்தில் எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

தாம் ஜனாதிபதியுடன் கலந்துரையாடி இது தொடர்பில் அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதன் போது உறுதியளித்தார்.

இது தொடர்பான அறிவிப்பை இன்று பாராளுமன்றம் கூடும் சந்தரப்பத்தில் பிரதமர் விடுப்பார் என தாம் எதிர்ப்பார்ப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன கூறியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்