அரசியலமைப்புத் திருத்தம்: திருகோணமலையில் 22 யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன

அரசியலமைப்புத் திருத்தம்: திருகோணமலையில் 22 யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன

எழுத்தாளர் Bella Dalima

23 Feb, 2016 | 6:10 pm

திருகோணமலை மாவட்டத்திற்கான அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக மக்கள் கருத்தறியும் அமர்வு மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்றது.

இன்றைய அமர்வின் போது பொது மக்கள், சிவில் சமூக பிரிதிநிதிகள் மற்றும் அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் தமது கருத்துகளைப் பதிவு செய்தனர்.

இன்றைய அமர்வின்போது, அரசிலமைப்புத் திருத்தத்திற்கான 22 யோசனைகள் முன்வைக்கப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.

60 வயதுக்கு மேற்பட்டோர் அரசியலில் ஈடுபடக் கூடாது, இன விகிதாசார அடிப்படை பேணப்பட வேண்டும் போன்ற யோசனைகள் இதன்போது முன்வைக்கப்பட்டன.

நாளைய தினமும் திருகோணமலை மாவட்ட செயலகத்தில் அரசியல் அமைப்பு திருத்தம் தொடர்பில் மக்கள் கருத்தறியும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்