ஃபிஜியைத் தாக்கிய வின்ஸ்டன்: 29 பேர் உயிரிழப்பு

ஃபிஜியைத் தாக்கிய வின்ஸ்டன்: 29 பேர் உயிரிழப்பு

ஃபிஜியைத் தாக்கிய வின்ஸ்டன்: 29 பேர் உயிரிழப்பு

எழுத்தாளர் Bella Dalima

23 Feb, 2016 | 3:39 pm

சுற்றுலாவிற்குப் பெயர்போன ஃபிஜி தீவினைத் தாக்கிய வின்ஸ்டன் புயலால் 29 பேர் உயிரிழந்துள்ளனர்.

பசுபிக் பெருங்கடலில் கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் உருவான வின்ஸ்டன் புயல் மணிக்கு 325 கிலோமீற்றர் வேகத்தில் கடுமையாக ஃபிஜி தீவைத் தாக்கியது.

இதனால், கடலோரப் பகுதிகளில் பலத்த சேதம் ஏற்பட்டது. ஓவலா, கோரோ உள்ளிட்ட பல பகுதிகளில் வீடுகள் இடிந்து தரைமட்டமாகின.

இடிபாடுகளில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை தற்போது 29 ஆக அதிகரித்துள்ளது.

கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் பலரைக் காணவில்லை என்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

புயல் காரணமாக, கடந்த இரண்டு நாட்களாக முடங்கியிருந்த விமான சேவை திங்கட்கிழமை படிப்படியாக சீரடையத் தொடங்கியது.

இதையடுத்து, அங்கிருந்த சுற்றுலாப் பயணிகள் பலர் வெளியேறினர்.

இன்னும் பல இடங்களில் தொலைத்தொடர்பு சேவை முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.

ஃபிஜி அரசு தேவையான மீட்பு நடவடிக்கைகளை துரிதகதியில் முடுக்கிவிட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்