யுத்த காலத்தின் போது ஜேர்மனியில் தஞ்சமடைந்த இலங்கையர்களை நாட்டிற்கு வருமாறு ஜனாதிபதி அழைப்பு

யுத்த காலத்தின் போது ஜேர்மனியில் தஞ்சமடைந்த இலங்கையர்களை நாட்டிற்கு வருமாறு ஜனாதிபதி அழைப்பு

யுத்த காலத்தின் போது ஜேர்மனியில் தஞ்சமடைந்த இலங்கையர்களை நாட்டிற்கு வருமாறு ஜனாதிபதி அழைப்பு

எழுத்தாளர் Staff Writer

18 Feb, 2016 | 6:44 am

யுத்த காலத்தின் போது ஜேர்மனியில் தஞ்சமடைந்த இலங்கையர்களை மீண்டும் நாட்டிற்கு வருகை தருமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திறந்த அழைப்பு விடுத்துள்ளார்.

ஜேர்மன் அதிபர் ஏங்கலா மேர்கல் உடனான உத்தியோகபூர்வ கலந்துரையாடலின் பின்னர் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஜேர்மன் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும வகையில் ஜனாதிபதி இந்த அழைப்பினை விடுத்துள்ளார்.

இலங்கையில் அனைத்து இனத்தவர்களும் நிம்மதியாக வாழ்வதற்கான ஜனநாயகம் நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி இதன் போது குறிப்பிட்டுள்ளார்.

இந்த சுதந்திரத்தினை அனுபவிப்பதற்கு ஜேர்மன் வாழ் இலங்கையர்களை மீள வருமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.

இதே வேளை கடந்த 5 தசாப்த காலமான ஜேர்மனால் இலங்கைக்கு வழங்கப்படும் அபிவிருத்திக்கான நிதி உதவி தொடர்பில் தனது இதயபூர்வமான நன்றிகளை தெரிவித்துள்ள ஜனாதிபதி, இரு நாடுகளுக்கு இடையில் காணப்படும் நல்லுறவை புதிய பரிணாமத்தில் அபிவிருத்தி செய்வது நோக்கம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜேர்மனுக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று அந் நாட்டு வர்த்தக பிரமுகர்களை சந்திக்கவுள்ளார்.

இந்த சந்திப்பின் பின்னர் ஜனாதிபதி ஒஸ்ரியா நோக்கி பயணிக்கவுள்ளதாக ஜனாதிபதியின் சிரேஸ்ட ஊடகப்பணிப்பாளர் தர்மசிறி பண்டார ஏக்கநாயக்க குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்