மஹிந்த ராஜபக்ஸ ஊழல் மோசடி ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர்

மஹிந்த ராஜபக்ஸ ஊழல் மோசடி ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர்

எழுத்தாளர் Staff Writer

18 Feb, 2016 | 1:19 pm

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பாரிய ஊழல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் இன்று மீண்டும் ஆஜராகியிருந்தார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது சுயாதீன தொலைக்காட்சி சேவையில் கட்டணம் செலுத்தப்படாது விளம்பரம் ஔிபரப்பு செய்யப்பட்டமை தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்காக முன்னாள் ஜனாதிபதிக்கு இன்றும் அழைப்பு விடுக்கப்பட்டதாக ஆணைக்குழுவின் செயலாளர் லெஷில் டி சில்வா குறிப்பிட்டார்.

அதிகாரத்தை பயன்படுத்தி அரச நிறுவனங்களுக்கு நட்டத்தை ஏற்படுத்தியுள்ளமை தொடர்பான முறைப்பாடு குறித்தே விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பாரிய ஊழல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் லெஷில் டி சில்வா தெரிவித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்