பொதுச்சொத்துக்களை சூறையாட யாருக்கும் இடமளிக்கக் கூடாது: ரிஷாட் பதியுதீன்

பொதுச்சொத்துக்களை சூறையாட யாருக்கும் இடமளிக்கக் கூடாது: ரிஷாட் பதியுதீன்

எழுத்தாளர் Bella Dalima

18 Feb, 2016 | 8:44 pm

மன்னார் – முருங்கன் பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட பஸ் தரிப்பிடம் இன்று மக்கள் பாவனைக்குக் கையளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வு வடமாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.

இந்த பஸ்தரிப்பு நிலையம் வடமாகாண போக்குவரத்து அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்டது.

இன்றைய திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டிருந்தார்.

இந்நிகழ்வில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்ததாவது,

[quote]எல்லோருக்கும் சட்டம் ஒன்றுதான். பொலிஸாரோ அல்லது பொலிஸிற்குத் தெரிந்தவர்களோ அல்லது அமைச்சருக்குத் தெரியும், எம்.பி. க்குத் தெரியும் என்று இன்னொரு சட்டம் ஒன்றும் கிடையாது. அவ்வாறு நாங்களும் ஒருநாளும் இடம்கொடுப்பதில்லை. ஆனால், எங்களுடைய பெயர்கள் பயன்படுத்தப்படலாம். எங்களுடைய வளம் எல்லோருக்கும் சொந்தமான வளம். இந்த மண்ணில் இருக்கின்ற மண்ணாக இருக்கலாம், கிரவலாக இருக்கலாம், காட்டுவளமாக இருக்கலாம், மிருகங்களாக இருக்கலாம், இவை அத்தனையும் இந்த மாவட்டத்தில் இருக்கின்ற மக்களின் பொதுச்சொத்துக்கள். இதை அபகரிப்பதற்கு யாருக்காவது பணம் கொடுத்து, இலஞ்சம் கொடுத்து அல்லது யாரையாவது பிடித்து இதை சூறையாடுவதற்கு இந்த மாவட்டத்தில் இருக்கின்ற யாரும் இடம்கொடுக்கக் கூடாது என்று நான் உங்கள் எல்லோர் சார்பிலும் அரசியல்வாதி சார்பிலும் மதத்தலைவர்கள் முன்னாலும் வேண்டி நிற்கின்றேன்.[/quote]

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்