பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில்

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில்

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில்

எழுத்தாளர் Staff Writer

18 Feb, 2016 | 1:13 pm

பல கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் இன்று நண்பகல் முதல் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

நாட்டிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் இந்த எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக அகில இலங்கை பல்கலைக்கழக கல்விசாரா சேவையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஓய்வூதிய வயதை 60 வயது வரை  நீடித்தல், அடிப்படை சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.

இதேவேளை, வவுனியா பல்கலைக்கழகத்திலும் இந்த எதிர்ப்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.

இந்த எதிர்ப்பு நடவடிக்கை மற்றும் ஊழியர்களின் கோரிக்கை குறித்து ஆராய்வதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் டி சில்வாவுடன் தொடர்புகொள்ள மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்