பலாலி விமான நிலையம், மயிலிட்டி துறைமுக அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடப்பட்டது

பலாலி விமான நிலையம், மயிலிட்டி துறைமுக அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடப்பட்டது

எழுத்தாளர் Bella Dalima

18 Feb, 2016 | 7:21 pm

பலாலி விமான நிலைய விஸ்தரிப்பு மற்றும் மயிலிட்டி துறைமுக அபிவிருத்தி தொடர்பில் இறுதித் தீர்மானம் மேற்கொள்வதற்கான கலந்துரையாடல் இன்று நடைபெற்றது.

யாழ். மாவட்ட செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, பாராளுமன்ற உறுப்பினர்
அங்கஜன் ராமநாதன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

இவர்களைத் தவிர மேலும் பல பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், வலி. வடக்கு மீள்குடியேற்றக் குழு உறுப்பினர்கள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டு தமது கருத்துக்களை முன்வைத்திருந்தனர்.

இன்றைய இந்த கலந்துரையாடலின்போது சில முக்கிய தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அவையாவன…

01. அடிப்படை வசதிகளோடு மக்கள் உடனடியாக மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டும் என இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது

02. மயிலிட்டி துறைமுகம் அபிவிருத்தி செய்யப்பட்டு மக்களிடம் கையளிக்கப்பட வேண்டும் எனவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

03. விமான நிலைய விஸ்தரிப்பு தற்போதைக்கு அவசியமில்லை எனவும் முதலில் மீள்குடியேற்றம் பூர்த்தி செய்யப்பட வேண்டும் எனவும் இன்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் கூறினார்.

இந்தத் தீர்மானங்களை யாழ். மாவட்ட அரச அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் நாளை (19) ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கவுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்