த.தே.கூ தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு எதிராக மனு தாக்கல்: இன்று பரிசீலிக்கப்பட்டது

த.தே.கூ தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு எதிராக மனு தாக்கல்: இன்று பரிசீலிக்கப்பட்டது

த.தே.கூ தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு எதிராக மனு தாக்கல்: இன்று பரிசீலிக்கப்பட்டது

எழுத்தாளர் Bella Dalima

18 Feb, 2016 | 7:27 pm

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு உயர்நீதிமன்றத்தில் இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசியலமைப்புக்கு முரணான வகையில் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தை சமர்ப்பித்திருந்ததாகத் தெரிவித்து தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு மக்களை ஏமாற்றி நாட்டில் சமஷ்டி அரசொன்றை உருவாக்குவதற்கு முயற்சிப்பதாக மனுதாரர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இந்த மனுவை தள்ளுபடி செய்யுமாறு பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் இன்று நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தனர்.

எவ்வாறாயினும், இந்த மனுவை தொடர்ந்தும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர்நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது.

இதற்கமைய, மனு எதிர்வரும் ஜுன் மாதம் 27 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்