தெரண மீண்டும் ராஜபக்ஸ சார்பில் செயற்படுமாயின் திருடப்பட்டவை தொடர்பில் எம்மால் கூற முடியும் – பிரதமர்

தெரண மீண்டும் ராஜபக்ஸ சார்பில் செயற்படுமாயின் திருடப்பட்டவை தொடர்பில் எம்மால் கூற முடியும் – பிரதமர்

எழுத்தாளர் Bella Dalima

18 Feb, 2016 | 9:11 pm

இலங்கையின் இளைஞர், யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக்கொடுப்பதற்கான விசேட செயற்றிட்டமொன்றை ஐக்கிய தேசிய முன்னணி நடைமுறைப்படுத்தியுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஜெர்மன் விஜயமும் இந்த செயற்றிட்டத்திற்கு வலுசேர்த்துள்ளதாக பிரதமர் சுட்டிக்காட்டினார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று விசேட உரையாற்றியபோதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார்.

மேலும் பிரதமர் தெரிவித்ததாவது,

[quote]வர்த்தக உடன்படிக்கைகளை ஏற்படுத்திக்கொண்டு தொழில் வாய்ப்புக்களை உருவாக்குவோம் என நாம் முதலில் கூறினோம். நாம் செல்லும் வேகம் போதாது என்றால் எம்மை விமர்சிக்க முடியும். ஆனால், அதனை தடுக்கவோ சீர்குலைக்கவோ முடியாது. சீர்குலைக்கும் அனைவரையும் எதிர்கொள்வதற்கு நாம் தயார். ஜி.எம்.ஓ எனக்கு எதிராக குற்றச்சாட்டொன்றை முன்வைத்துள்ளது. அவர்கள் தொடர்பில் ஆராய்வதற்காக எனது அலுவலகத்திற்கு சி.ஐடியினரை அனுப்பியுள்ளதாகக் கூறுகின்றனர். சில ஊடகங்களும் கூறுகின்றன. வர்த்தக உடன்படிக்கை குறித்து ஆராய்வது ஜி.எம்.ஓவின் கடமையல்ல. அவர்களுக்கு எதிராக விசேட முறைப்பாடொன்றும் உள்ளது. அதிலிருக்கும் கைப்மொம்மைகள் ராஜபக்ஸ ஆட்சியின் போது அனைத்து சலுகைகளையும் பெற்றவர்கள். தெரணவும் நேற்று மீண்டும் விளையாட்டை ஆரம்பித்துள்ளது. தெரண மீண்டும் ராஜபக்ஸ சார்பில் செயற்படுமாயின் திருடப்பட்டவை தொடர்பில் எம்மால் கூற முடியும்.[/quote]

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்