சம்பூர் சிறுவன் மரணம்: சந்தேகநபரான 15 வயது மாணவனின் விளக்கமறியல் நீட்டிப்பு

சம்பூர் சிறுவன் மரணம்: சந்தேகநபரான 15 வயது மாணவனின் விளக்கமறியல் நீட்டிப்பு

எழுத்தாளர் Bella Dalima

18 Feb, 2016 | 7:23 pm

சம்பூரில் 6 வயது சிறுவன் கல்லொன்றில் கட்டப்பட்ட நிலையில் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட 15 வயது மாணவனின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபரான 15 வயதுடைய சிறுவன் மூதூர் நீதிமன்ற நீதவான் ஐ.என். ரிஸ்வான் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்பட்டிருந்தார்.

கடந்த 16 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது சம்பவம் தொடர்பில் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் அளிப்பதற்காக சந்தேகநபருக்கு நீதிமன்றம் 48 மணித்தியால கால அவகாசத்தை வழங்கியிருந்தது.

ஆயினும், இன்றும் வாக்குமூலம் பதிவு செய்யப்படாத நிலையில், இந்த வழக்கு விசாரணை எதிர்வரும் 25 ஆம் திகதிக்கு நீதிமன்றத்தினால் ஒத்திவைக்கப்பட்டது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்