கொழும்பு – டயகம பஸ்ஸில் மோதுண்டு இளைஞன் உயிரிழப்பு

கொழும்பு – டயகம பஸ்ஸில் மோதுண்டு இளைஞன் உயிரிழப்பு

கொழும்பு – டயகம பஸ்ஸில் மோதுண்டு இளைஞன் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

18 Feb, 2016 | 7:10 am

கொழும்பிலிருந்து டயகம நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸில் மோதுண்ட இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து நேற்று மாலை 6.45 அளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பிலிருந்து ஹட்டன் ஊடாக டயகம பயணிக்கும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸிலேயே இளைஞன் மோதுண்டதாக தெரியவந்துள்ளது.

உயிரிழந்த இளைஞன் அந்த பஸ்ஸிலேயே பயணம் செய்துள்ளதுடன், ஹட்டன் தரிப்பிடத்தில் நிறுத்துவதற்கு முன்பாகவே அவர் பஸ்ஸிலிருந்து இறங்க முற்பட்டபோது தவறிவீழ்ந்து விபத்திற்குள்ளாகியதாக எமது பிராந்திய செய்தியாளர் கூறினார்.

விபத்தில் உயிரிழந்தவரின் சடலம் கிளங்கன் மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த இளைஞன் அடையாளம் காணப்படவில்லை என்பதுடன், விபத்துடன் தொடர்புடைய பஸ்ஸின் சாரதியை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்