கொழும்பில் வாழும் சேரிப்புற வாசிகளுக்கு புதிதாக 13,000 வீடுகள் அமைக்கத் திட்டம்

கொழும்பில் வாழும் சேரிப்புற வாசிகளுக்கு புதிதாக 13,000 வீடுகள் அமைக்கத் திட்டம்

கொழும்பில் வாழும் சேரிப்புற வாசிகளுக்கு புதிதாக 13,000 வீடுகள் அமைக்கத் திட்டம்

எழுத்தாளர் Staff Writer

18 Feb, 2016 | 12:46 pm

கொழும்பில் வாழும் சேரிப்புற வாசிகளுக்கு 13,000 புதிய வீடுகளில் குடியமர்த்துவதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபை திட்டமிட்டுள்ளது.

கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு வேலைத்திட்டங்களின் போது சேரிப் புறத்தில் வாழந்த 5,000 பேர் புதிய வீடுகளில் குடியமர்த்தப்பட்டதாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ரஞ்சித் பெர்ணான்டோ குறிப்பிட்டுள்ளார்.

சிறிய பகுதியில் வாழ்ந்த இவர்களுக்கு 500 சதுர அடி பரப்பிலான வீடுகளை பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் சேரிப்புறத்தில் வாழும் 47,000 பேரை புதிய இடத்தில் குடியமர்த்தப்பட வேண்டி உள்ளதாகவும் நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு நகரின் பொருளாதார பெறுமதி இடங்களில் வாழும் சேரிப்புர மக்கள் நகர அபிவிருத்தி மற்றும் திட்டமிடல் என்பவற்றிக்கு இடையூறாக காணப்படுவதாகவும் நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ரஞ்சித் பெணர்ன்டோ சுட்டிக்காட்டியுள்ளார்.

இவர்களை சரியான சமூக கட்டமைப்புக்குள் கொண்டு வராத பட்சத்தில் எதிர்காலத்தில் இவ்வாறானவர்கள் பாரிய சமூக பிரச்சினைகளை எதிர்நோக்க கூடும் என அவர் தெரிவித்தார்.

எனவே சட்டவிரோதமாக குடியேறி இருக்கும் சேரிப்புற மக்களின் தேவைக்கேற்ப புதிய வீடுகளை பெற்றுக் கொடுப்பதே அரசாங்கத்தின் நோக்கம் எனவும் நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ரஞ்சித் பெணர்ன்டோ குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்