இலங்கைக்கு ஜெர்மன் அதிகபட்ச ஒத்துழைப்பை வழங்கும் – ஜனாதிபதி ஜோச்சிம் கவுக்

இலங்கைக்கு ஜெர்மன் அதிகபட்ச ஒத்துழைப்பை வழங்கும் – ஜனாதிபதி ஜோச்சிம் கவுக்

எழுத்தாளர் Bella Dalima

18 Feb, 2016 | 7:49 pm

ஜனநாயகத்தையும் நல்லிணக்கத்தையும் உறுதிப்படுத்தி முன்னோக்கிச் செல்லும் இலங்கைக்கு ஜெர்மன் அதிகபட்ச ஒத்துழைப்பை வழங்கும் என அந்நாட்டு ஜனாதிபதி ஜோச்சிம் கவுக் (Joachim Gauck) குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ஜெர்மன் ஜனாதிபதி ஜோச்சிம் கவுக் ஆகி​யோருக்கு இடையிலான சந்திப்பு நேற்று பிற்பகல் பெர்லினில் உள்ள ப்ளேவியூ மாளிகையில் நடைபெற்றது.

இரு நாட்டுத் தலைவர்களும் இதன்போது இரு தரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தினர்.

இலங்கையின் அபிவிருத்திக்கு ஜெர்மன் அரசாங்கம் வழங்கும் ஒத்துழைப்பு தொடர்பில் ஜெர்மன் ஜனாதிபதிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நன்றி தெரிவித்துள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்