அரசியலமைப்புத் திருத்தம்: புத்தளத்தில் 58 பேரின் ஆலோசனைகள் பெறப்பட்டுள்ளன

அரசியலமைப்புத் திருத்தம்: புத்தளத்தில் 58 பேரின் ஆலோசனைகள் பெறப்பட்டுள்ளன

எழுத்தாளர் Bella Dalima

18 Feb, 2016 | 7:37 pm

அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் மக்களின் கருத்துக்களைக் கேட்டறியும் குழு இன்று இரண்டாவது நாளாகவும் புத்தளம் மாவட்ட செயலகத்தில் கூடியது.

இதன்போது தனித்தனியாகவும் குழுவாகவும் கருத்துக்களை முன்வைப்பதற்கு மக்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.

வட மேல் மாகாணத்தில் அரச கரும மொழியாக தமிழ் மொழியை பிரகடனப்படுத்த வேண்டும், புத்தளம் மாவட்டம் 6 தொகுதிகளாக மாற்றப்பட வேண்டும், உள்ளூராட்சி மன்றங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் போன்ற கருத்துக்கள் இன்றைய அமர்வில் முன்வைக்கப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இன்றைய அமர்வில் அரசியல்வாதிகள், அரச மற்றும் அரச சார்பற்ற அமைப்புகளின் பிரதிநிதிகள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் தமது கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.

புத்தளம் மாவட்டத்தில் 2 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட இந்த அமர்வில் 58 பேர் தமது யோசனைகளையும் கருத்துக்களையும் முன்வைத்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்