வட்டுவாகலில் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு 

வட்டுவாகலில் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு 

எழுத்தாளர் Bella Dalima

17 Feb, 2016 | 6:41 pm

இறுதிக்கட்ட யுத்தத்தின்போது முல்லைத்தீவு, வட்டுவாகலில் இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டதாகக் கூறப்படும் நபர்களின் பதிவுகளை ஏப்ரல் மாதம் 19 ஆம் திகதியன்று சமர்ப்பிக்குமாறு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இறுதிக்கட்ட யுத்தத்தின்போது காணாமற்போனோரின் உறவினர்களால் தாக்கல் செய்யப்பட்டிருந்த ஆட்கொணர்வு மனு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.எம். சம்சுதீன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

முல்லைத்தீவு, வட்டுவாகல் பகுதியில் இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட தங்களின் உறவினர்களைக் காணவில்லை என காணாமற்போனோரது உறவினர்கள் 2013 ஆம் ஆண்டு வவுனியா நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுக்கள் மீதான விசாரணைகள் பின்னர் முல்லைத்தீவு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டன.

இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களின் பதிவுகள் இருப்பின் அவற்றை ஏப்ரல் மாதம் 19 ஆம் திகதியன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு இன்றைய விசாரணையின்போது இராணுவம் சார்பாக நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த அதிகாரிக்கு நீதவான் உத்தரவு பிறப்பித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்