லசந்த விக்ரமதுங்க கொலைக்குற்றவாளிகள் தொடர்பான படம் வௌியிடப்பட்டது

லசந்த விக்ரமதுங்க கொலைக்குற்றவாளிகள் தொடர்பான படம் வௌியிடப்பட்டது

எழுத்தாளர் Staff Writer

17 Feb, 2016 | 2:22 pm

சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, சாட்சியாளர்கள் வழங்கிய வாக்குமூலத்திற்கு ஏற்ப குற்றவாளிகள் என சந்தேகிக்கபடும் இருவரின் ஓவியத்தை பொலிஸார் வௌியிட்டுள்ளனர்.

பொலிஸார் வௌியிட்டுள்ள முதலாவது ஓவியத்தின் பிரகாரம் குறித்த சந்தேகநபர் 35 வயது மதிக்கத்தக்கவர் எனவும், 5.8 அடி உயரம் கொண்டவர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சந்தேகநபர் மண்ணிறமான கண்களை கொண்டவர் எனவும், சிவந்த மேனியுடையவர் எனவும் பொலிஸார் வௌியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2 ஆவது ஓவியத்தில் சித்தரிக்கப்பட்டிருக்கும் சந்தேகநகபர் 40 வயது மதிக்கத்தக்கவர் எனவும், 5 .10 அடி உயரமுடைய பருமனானவர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவர்கள் தொடர்பிலான தகவல்கள் அறிந்தால் தமக்கு அறிவிக்குமாறு பொலிஸார் கோரியுள்ளனர்.

071 589 17 53 அல்லது 071 859 1770 அல்லது 077 32 91 500 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்க முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்