மகனுக்கு பிணை கோரி  சட்டத்தரணியாக நீதிமன்றம் சென்ற மஹிந்த ராஜபக்ஸ

 மகனுக்கு பிணை கோரி  சட்டத்தரணியாக நீதிமன்றம் சென்ற மஹிந்த ராஜபக்ஸ

எழுத்தாளர் Bella Dalima

17 Feb, 2016 | 9:21 pm

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் மகன் யோஷித்த ராஜபக்ஸ உள்ளிட்ட ஐவருக்கு பிணை வழங்குவது தொடர்பிலான பரிசீலனை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பிணை மனு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

மகனின் பிணை மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ சட்டத்தரணியாக நீதிமன்றத்திற்குச் சென்றிருந்தார்.

இதன்போது, பிரதிவாதிகளான பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினருக்கு மேல் நீதிமன்றத்தினால் இன்று அழைப்பாணை அனுப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்