போதைப்பொருள் கொண்டு வருவதை தடுப்பதற்கு வெலிக்கடை சிறைச்சாலையில் விசேட திட்டம்

போதைப்பொருள் கொண்டு வருவதை தடுப்பதற்கு வெலிக்கடை சிறைச்சாலையில் விசேட திட்டம்

போதைப்பொருள் கொண்டு வருவதை தடுப்பதற்கு வெலிக்கடை சிறைச்சாலையில் விசேட திட்டம்

எழுத்தாளர் Staff Writer

17 Feb, 2016 | 11:52 am

கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் கொண்டு வருவதை தடுப்பதற்காக பொலிஸ் மோப்ப நாய்களை ஈடுபடுத்துவதற்கு சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பொலிஸ் மா அதிபரின் வேண்டுகோளுக்கு அமையவே மோப்ப நாய்களை ஈடுபடுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் நிஷான் தனசிங்க குறிப்பிட்டுள்ளார்.

சிறைச்சாலைக்குள் பிரவேசிக்கும் நபர்களை மோப்ப நாய்கள் மூலம் சோதனை செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சிறைச்சாலைக்குள் இருந்து தொலைபேசி மூலம் கப்பம் பெறும் நடவடிக்கைகளை நிறுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் கூறியுள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்