பெண் தலைமைத்துவ குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் சிவனருள் உற்பத்தி நிலையம்

பெண் தலைமைத்துவ குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் சிவனருள் உற்பத்தி நிலையம்

எழுத்தாளர் Bella Dalima

17 Feb, 2016 | 10:31 pm

கிளிநொச்சி – பெரிய பரந்தன் பகுதியில் இயங்கிவரும் சிவனருள் உற்பத்தி நிலையத்தின் மூலம் அதிகளவிலான பெண்கள் தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டு பெண் தலைமைத்துவத்தின் கீழ் வாழும் குடும்பங்களின் வாழ்வாதாரத்தினைக் கட்டியெழுப்பும் நோக்குடன் சிவனருள் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையம், பல்வேறு உற்பத்திகளை சந்தைப்படுத்தி வருவதுடன், வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பெண்களுக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்கி வருகிறது.

இதேவேளை, தமது உற்பத்திகளை மக்கள் அதிகளவில் நுகரும்போது தம்மைப் போன்று பலரது வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடியும் என அங்கு பணியாற்றும் பெண் ஒருவர் எமக்குக் குறிப்பிட்டார்.

சிவனருள் உற்பத்தி நிலையத்தில் பணியாற்றும் பெண்களுக்கு அண்மையில் விடுதியொன்றும் திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

பெண் தலைமைத்துவ குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் கிளிநொச்சி சிவனருள் உற்பத்தி நிலையம்

Posted by Newsfirst.lk tamil on Wednesday, February 17, 2016


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்