பலப்பிட்டிய நீதிமன்றம் முன்பாக துப்பாக்கிப் பிரயோகம்: இரண்டாம் நபர் உயிரிழப்பு 

பலப்பிட்டிய நீதிமன்றம் முன்பாக துப்பாக்கிப் பிரயோகம்: இரண்டாம் நபர் உயிரிழப்பு 

பலப்பிட்டிய நீதிமன்றம் முன்பாக துப்பாக்கிப் பிரயோகம்: இரண்டாம் நபர் உயிரிழப்பு 

எழுத்தாளர் Bella Dalima

17 Feb, 2016 | 4:33 pm

பலப்பிட்டிய நீதவான் நீதிமன்றத்திற்கு முன்பாக இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

நேற்றைய தினம் (16) இடம்பெற்ற இந்த துப்பாக்கிப் பிரயோக சம்பவத்தில், கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார். மற்றொருவர் காயமடைந்திருந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே இரண்டாமவர் உயிரிழந்துள்ளதாக  தேசிய வைத்தியசாலை அறிவித்துள்ளது.

உயிரிழந்த இருவரும் நேற்று இடம்பெற்ற வழக்கு விசாரணைக்காக நீதிமன்றம் சென்றிருந்ததுடன், விசாரணைகள் நிறைவடைந்த பின்னர் அவர்கள் நீதிமன்றத்திற்கு முன்பாக உள்ள வர்த்தக நிலையமொன்றுக்குச் சென்றுள்ளனர்.

இதன்போது மோட்டார் சைக்கிளில் வந்த துப்பாக்கிதாரிகள் அவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்தவர்கள் பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர்களில் ஒருவர் உயிரிழந்தார்.

மற்றைய நபர் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

கந்தளாய் பகுதியைச் சேர்ந்த 54 வயதான கே.ஏ. பியரத்ன என்பவரே நேற்று உயிரிழந்திருந்த நிலையில், காயமடைந்திருந்த 30 வயதான சமிந்த குமார இன்று உயிரிழந்துள்ளார்.

2011 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 19 ஆம் திகதி பென்தொட்ட பிரதேசத்தில் விடுதியொன்றின் ஊழியரை சுட்டுக்கொலை செய்த சம்பவம் தொடர்பிலான வழக்கில் ஆஜராகுவதற்காக இவர்கள் நேற்று நீதிமன்றம் சென்றிருந்தனர்.

உயிரிழந்த கே.ஏ. பியரத்ன இந்த கொலைச் சம்பவத்தின் முதலாவது சந்தேக நபராவார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்