தொட்டலங்க பிரதேசத்தில் தொடர்ந்தும் அமைதியின்மை

தொட்டலங்க பிரதேசத்தில் தொடர்ந்தும் அமைதியின்மை

தொட்டலங்க பிரதேசத்தில் தொடர்ந்தும் அமைதியின்மை

எழுத்தாளர் Staff Writer

17 Feb, 2016 | 7:02 am

வீடுகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொட்டலங்க புதிய பாலத்திற்கு அருகில் நேற்று பிற்பகல் ஆரம்பிக்கப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது.

தொட்டலங்க பேர்கியூஸன் வீதியின் கஜிமா தோட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த சட்டவிரோத வீடுகளை அகற்றுவதற்கு நேற்று காலை நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதனைடுத்து வீடுகளை அகற்றுவதற்கு அங்கிருந்த மக்கள் இன்று கடும் எதிர்ப்புத் தெரிவித்து தொட்டலங்க பாலத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு நகரின் பல்வேறு வீதிகளிலும் நேற்று இரவு பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டிருந்தது.

கஜீமா தோட்டத்தில் உறுதிப்பத்திரம் இல்லாத சிலர் இவ்வாறு வீடுகளை அமைத்து வாழ்ந்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த காலத்தில் குடிசை வீடுகளில் வாழ்வோருக்கு வீடுகளை வழங்கும் போது அதன் உரிமையாளர்களுக்கே வீடுகள் கிடைத்தன.

அதனால் சில வீடுகளை வாடகைக்கு பெற்றிருந்தவர்களுக்கு குடிசைகளை அகற்றும் போது அங்கிருந்து வௌியேற வேண்டி ஏற்பட்டது.

பின்னர் அவர்கள் மீண்டும் கஜீமா தோட்டத்திற்கு வந்து குடியேறியுள்ளனர்.

இதேவேளை, தமது வீடுகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொட்டலங்க புதிய பாலத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கான வீடுகள் ஏற்கனவே கையளிக்கப்பட்டுள்ளதாக கண்டி மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு தெரிவித்தது.

பலவந்தமாக குறித்த பகுதியில் தங்கியிருந்தமையாலேயே அவர்களை அகற்றுவதற்கு நேர்ந்ததாக அமைச்சின் செயலாளர் நிஹால் ரூபசிங்க குறிப்பிட்டுள்ளார்.

புதிய வீடுகளையும் பெற்றுக் கொண்டு தொடலங்க பேர்கியூஸன் வீதியின் கஜிமா தோட்டப்பகுதியையும் அவர்கள் பலவந்தமாக கைப்பற்றியிருந்தாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த தோட்டப்பகுதியிலிருந்து செல்லுமாறு பல தடவைகள் கோரிக்கை விடுத்த போதிலும் , அதனை செவிமடுக்காத நிலையிலேயே மக்களை அங்கிருந்து அகற்றுவதற்கு பொலிஸாரின் உதவியை நாடியதாக நிஹால் ரூபசிங்க கூறியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்