தொட்டலங்க ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்புக்கு வரும் வாகனங்களுக்கு விசேட போக்குவரத்துத் திட்டம்

தொட்டலங்க ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்புக்கு வரும் வாகனங்களுக்கு விசேட போக்குவரத்துத் திட்டம்

தொட்டலங்க ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்புக்கு வரும் வாகனங்களுக்கு விசேட போக்குவரத்துத் திட்டம்

எழுத்தாளர் Staff Writer

17 Feb, 2016 | 8:34 am

தொட்டலங்க பகுதியில் முன்னெடுக்கப்படும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடர்ந்தும் இடம் பெறுவதனால் நீர் கொழும்பு பகுதியில் இருந்து கொழும்புக்கு வரும் வாகனங்கள் வத்தளை – ஹேகித்த எலகந்த ஊடாக கொழும்பிற்குள் வரமுடியும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கொழும்பில் இருந்து வௌியேறும் வாகனங்களும் குறித்த பாதையை பயன்படுத்த முடியும் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி வரும் வாகனங்கள் களனி பாலத்தின் ஊடாக கொழும்பை அண்மிக்க முடியும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் கடவத்தையில் இருந்து அதிவேக வீதியின் ஊடாகவும் பயணிக்க முடியும் என பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

வீடுகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொட்டலங்க புதிய பாலத்திற்கு அருகில் நேற்று பிற்பகல் ஆரம்பிக்கப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது.

இதனால் அப்பகுதியில் போக்குவரத்து ஸதம்பிதம் அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்