தொடர்ந்தும் புறக்கணிப்பு: சம்பள உயர்வு கோரி தோட்டத் தொழிலாளர்கள் தெனியாயவில் ஆர்ப்பாட்டம்

தொடர்ந்தும் புறக்கணிப்பு: சம்பள உயர்வு கோரி தோட்டத் தொழிலாளர்கள் தெனியாயவில் ஆர்ப்பாட்டம்

எழுத்தாளர் Bella Dalima

17 Feb, 2016 | 9:44 pm

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிக்குமாறு கோரி தெனியாய பிரதேசத்தில் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

தெனியாய – வரல்ல பிரதேசத்தில் இன்று பிற்பகல் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிப்பதாக பல தடவைகள் உறுதிமொழி வழங்கப்பட்ட போதிலும் அது இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லையென இவர்கள் குறிப்பிட்டனர்.

நாட்டின் ஏனைய துறையினருக்கு சம்பளம் உயர்த்தப்பட்டுவரும் நிலையில், தாம் மட்டும் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுவதாக மக்கள் விசனம் தெரிவித்தனர்.

எனவே, விரைவில் தமது சம்பளத்தை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தோட்டத் தொழிலாளர்களுடன் சில தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளும், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டிருந்தனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்