ஜெர்மன் அதிபரை சந்தித்தார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

ஜெர்மன் அதிபரை சந்தித்தார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

எழுத்தாளர் Bella Dalima

17 Feb, 2016 | 7:45 pm

ஜெர்மனிக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு, அந்நாட்டு அதிபர் அஞ்சலா மேர்க்கல் தலைமையில் இன்று பெர்லின் நகரில் வரவேற்பளிக்கப்பட்டது.

அதன் பின்னர் இரண்டு தலைவர்களுக்கும் இடையில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இலங்கையின் அரச தலைவர் ஒருவர் 15 வருடங்களின் பின்னர் ஜெர்மனிக்கான விஜயத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இரு தரப்பு பேச்சுவார்த்தையின் பின்னர் அரச தலைவர்கள் ஒன்றிணைந்த ஊடக சந்திப்பொன்றிலும் கலந்து கொண்டனர்.

இலங்கையின் அபிவிருத்திக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குவதாக அஞ்சலா மேர்க்கல் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

திறன் அபிவிருத்தி, தொழில்நுட்பம் மற்றும் சுகாதார மேம்பாட்டிற்காக இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் அவர் கூறியுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்