சர்வதேச தடகளப் போட்டிக்கு வவுனியா இளைஞர் தெரிவு: உதவி வழங்காத  அமைச்சு

சர்வதேச தடகளப் போட்டிக்கு வவுனியா இளைஞர் தெரிவு: உதவி வழங்காத அமைச்சு

சர்வதேச தடகளப் போட்டிக்கு வவுனியா இளைஞர் தெரிவு: உதவி வழங்காத அமைச்சு

எழுத்தாளர் Bella Dalima

17 Feb, 2016 | 10:43 pm

எதிர்வரும் 20 ஆம் திகதி தாய்லாந்தின் பேங்கொக்கில் சர்வதேச ரீதியில் நடைபெறவுள்ள அஞ்சல் மரதன் ஓட்டத்திற்கு வவுனியாவைச் சேர்ந்த 28 வயதான குமார் நவநீதன் என்ற இளைஞர் தெரிவாகியுள்ளார்.

எனினும், இவருக்கான எவ்வித உதவிகளும் இதுவரையில் செய்துகொடுக்கப்படவில்லை என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

வவுனியா கூமாங்குளத்தைச் சேர்ந்த குமார் நவநீதன், சர்வதேச தடகளப் போட்டியில் 100 கிலோமீற்றர் அஞ்சல் மரதன் போட்டிக்குத் தெரிவாகியுள்ளார்.

வட மாகாணத்தில் இருந்து தெரிவாகியுள்ள இவர், இலங்கையில் இருந்து தெரிவாகியுள்ள 4 வீரர்களில் ஒரேயோரு தமிழ் வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விடயம் தொடர்பில் வடமாகாண விளையாட்டுத்துறை அமைச்சுக்கு அறிவித்துள்ள குமார் நவநீதன், இந்தப் போட்டிக்கான பயிற்சி மற்றும் பயணச் செலவுகளை வழங்குமாறு கோரி ஒரு மாதத்திற்கு முன்னரே கடிதம் ஒன்றை அனுப்பி வைத்தாக குறிப்பிட்டார்.

எனினும், வடமாகாண விளையாட்டுத்துறை அமைச்சினால் தனக்கு இதுவரையில் எவ்வித உதவியும் கிடைக்கவில்லை என தெரிவித்த குமார் நவநீதன், தனிப்பட்ட சிலர் மூலம் உதவி கிடைத்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், அது தனது பயிற்சிக்கும் பயணத்திற்கும் போதுமானதாக இல்லை என கூறினார்.

தந்தையை இழந்து 5 சகோதரர்களுடன் தாயின் துணையில் வாழும் இந்த வீரர், சர்வதேச மட்டத்தில் ஜொலிப்பதற்கு வட மாகாண விளையாட்டுத்துறை உதவவேண்டும் என எதிர்பார்த்தும் கைகூடாத நிலையில், கிடைத்த உதவித் தொகையில் தாய்லாந்து செல்வதற்காக இன்று கொழும்பு நோக்கி பயணித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்