கிராமி விருது வழங்கல் விழா 2016: டெய்லர் ஸ்விப்ட்டுக்கு 3, கென்ரிக் லேமருக்கு 5 விருதுகள் 

கிராமி விருது வழங்கல் விழா 2016: டெய்லர் ஸ்விப்ட்டுக்கு 3, கென்ரிக் லேமருக்கு 5 விருதுகள் 

கிராமி விருது வழங்கல் விழா 2016: டெய்லர் ஸ்விப்ட்டுக்கு 3, கென்ரிக் லேமருக்கு 5 விருதுகள் 

எழுத்தாளர் Bella Dalima

17 Feb, 2016 | 5:09 pm

அமெரிக்காவின் சிறந்த பொப்பிசைப் பாடகி டெய்லர் ஸ்விப்ட் மூன்று கிராமி விருதுகளை சுவீகரித்துள்ளார்.

ஆண்டின் சிறந்த அல்பத்திற்கான விருது உள்ளிட்ட 3 விருதுகளை அவர் சுவீகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

‘1989’ என பெயரிடப்பட்ட ஸ்விப்டின் அல்பமே ஆண்டின் சிறந்த அல்பமாகத் தெரிவாகியுள்ளது. அதே அல்பத்திற்கு சிறந்த பொப் பாடலுக்கான விருது வழங்கப்பட்டதுடன், டெய்லர் ஸ்விப்டின் ‘பேட் பிளட்’ அல்பம் சிறந்த இசை வீடியோவுக்கான விருதினையும் பெற்றது.

திரைப்படத் துறையில் ஆஸ்கர் விருது போன்று இசை உலகில் மிக உயரிய விருதாக கிராமி விருது கருதப்படுகிறது.

58 ஆவது ஆண்டு கிராமி விருது வழங்கல் விழா கடந்த 15 ஆம் திகதி லொஸ் ஏஞ்சல்ஸில் இடம்பெற்றது.

இதில் பல்வேறு பிரிவுகளின் கீழ் மொத்தம் 83 விருதுகள் வழங்கப்பட்டன. அவற்றில் சிறந்த அல்பம், ரெக்கார்ட் ஆப் தி இயர், சிறந்த பாடல், சிறந்த புதுமுகம் ஆகிய விருதுகள் மிகவும் முக்கியமானவை.

பிரிட்டனைச் சேர்ந்த மார்க் ரான்சன், அமெரிக்காவைச் சேர்ந்த புரூனோ மார்ஸ் ஆகியோரின் ‘அப்டவுன் பங்க்’ பாடலுக்கு ‘ரெக்கார்ட் ஆப் தி இயர்’ விருது கிடைத்தது.

ஆண்டின் சிறந்த பாடலுக்கான விருது எட் ஷரேனின் ‘திக் அவுட் லவுட்’ பாடலுக்கு வழங்கப்பட்டது.

சிறந்த புதுமுக இசைக் கலைஞருக்கான விருதை அமெரிக்காவைச் சேர்ந்த பொப் பாடகி மேகைன் டிரைனர் பெற்றார்.

அமெரிக்க ராப் பாடகர் கென்ரிக் லேமரின் ‘டூ பிம்ப் எ பட்டர்பிளை’ சிறந்த ராப் அல்பத்திற்கான விருதினைத் தட்டிச் சென்றது.

சிறந்த ராப் கூட்டு பாடலுக்கான விருது, சிறந்த ராப் பாடலுக்கான விருது, சிறந்த ராப் தனித்தன்மைக்கான விருது உட்பட 5 விருதுகளை அவர் பெற்றார்.

இதேவேளை, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டிஷ் திரைப்பட இயக்குநர் ஆசிப் கபாடியாவின் ‘அமி’ குறும்படத்திற்கு சிறந்த இசைப் படத்திற்கான விருது கிடைத்தது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்