கனடாவில் தனது சகோதரனை குணப்படுத்த சுமார் ஒரு இலட்சம் டொலர்கள் நிதி திரட்டிய 6 வயது சிறுமி

கனடாவில் தனது சகோதரனை குணப்படுத்த சுமார் ஒரு இலட்சம் டொலர்கள் நிதி திரட்டிய 6 வயது சிறுமி

கனடாவில் தனது சகோதரனை குணப்படுத்த சுமார் ஒரு இலட்சம் டொலர்கள் நிதி திரட்டிய 6 வயது சிறுமி

எழுத்தாளர் Staff Writer

17 Feb, 2016 | 11:42 am

கனடாவில் உள்ள ரொன்ஹான்ரோ நகரை சேர்ந்த 6 வயது சிறுமி நாமா உஷான். இவரது அண்ணா மரபணு குறைபாடு நோயால் தவித்து வருகிறார்.

எனவே, இவரால் நடக்கவும், பேசவும் முடியாது. இந்த நோயை குணப்படுத்த இதுவரை மருந்து கண்டு பிடிக்கவில்லை. இந்த நிலையில் நோயால் அவதிப்படும் தனது அண்ணனை காப்பாற்ற சிறுமி நாமா உஷான் விரும்பினார்.

அதற்காக தனக்கு 4 வயதாக இருக்கும்போதே படிப்படியாக நிதி திரட்டினார்.

அந்த தொகையை திபுண்டேசன் ஏஞ்சல்மேன் சின்ட்ரோம் தெரபியூடிக்ஸ் என்ற அறக்கட்டளைக்கு அளித்தார். இந்த நோயை குணப்படுத்த ஒரு மருத்துவ ஆய்வாளர் நியமிக்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

தற்போது இச்சிறுமியுடன் சேர்ந்து ரொஹொன்ரோ, நகர வாசிகளும் சேர்ந்து நன்கொடை திரட்டும் முகாம் ஒன்றை நடத்தினர். அதில் ரூ. 4 இலட்சம் நன்கொடை கிடைத்துள்ளது. இது போன்று கடந்த சில ஆண்டுகளில் மரபணு குறைபாட்டிற்கு மருந்து கண்டுபிடிக்க சுமார் ஒரு இலட்சம் டொலர்கள் நன்கொடை வசூலித்துள்ளார்.

கனடாவில் மரபணு குறைபாடு நோய் 15,000 பேரில் ஒருவருக்கு தாக்கியுள்ளதாக மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்