ஐ.நா.வின் முன்னாள் பொதுச் செயலாளர் பூத்ரோஸ் பூத்ரோஸ் காலி காலமானார்

ஐ.நா.வின் முன்னாள் பொதுச் செயலாளர் பூத்ரோஸ் பூத்ரோஸ் காலி காலமானார்

ஐ.நா.வின் முன்னாள் பொதுச் செயலாளர் பூத்ரோஸ் பூத்ரோஸ் காலி காலமானார்

எழுத்தாளர் Staff Writer

17 Feb, 2016 | 8:17 am

ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச் செயலாளர் பூத்ரோஸ் பூத்ரோஸ் காலி, தனது 93ஆவது வயதில் காலமானார்.

எகிப்தியரான இவர், ஐக்கிய நாடுகள் சபையில் உயர் பதவி வகித்த முதலாவது அரேபியராவார்.

1992ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரக அவர் பதவியேற்றப்போது, உலக நாடுகள் முதலாவது வளைகுடா போரை சந்திந்திருந்தன.

யூகோஸ்லாவியா மற்றும் சோமாலியா ஆகிய நாடுகளின் உள்நாட்டு போர் மற்றும் வளைகுடாவில் தொடர்ந்த அமைதியின்மையையும் ஆகிவற்றை உடனடி பிரச்சினையாக அவர் எதிர்கொண்டார்.

ருவாண்டா இனப்படுகொலையை தடுக்க ஐ.நா. தவறியமையை, பூத்ரோஸ் பூத்ரோஸ் காலி விமர்சித்திருந்தார்.
பொஸ்னியா மீதான நேட்டோவின் வெடிகுண்டுத் தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தால், அவர் அமெரிக்காவின் கோபத்திற்கும் உள்ளானார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்