எண்ணெய் ஏற்றுமதி நாடுகள் சில தமது எண்ணெய் உற்பத்தியை நிறுத்த ஒப்புதல்

எண்ணெய் ஏற்றுமதி நாடுகள் சில தமது எண்ணெய் உற்பத்தியை நிறுத்த ஒப்புதல்

எண்ணெய் ஏற்றுமதி நாடுகள் சில தமது எண்ணெய் உற்பத்தியை நிறுத்த ஒப்புதல்

எழுத்தாளர் Staff Writer

17 Feb, 2016 | 9:36 am

உலகில் எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் நான்கு பிரதான நாடுகள் எண்ணெய் உற்பத்தியை தற்போதைய மட்டத்திலேயே நிறுத்திவைக்க ஒப்புக்கொண்டுள்ளன.

அதிக உற்பத்தியால் ஏற்பட்டுள்ள எண்ணெய் விலை வீழ்ச்சியைச் சமாளிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

ரஷ்யா, சவுதி அரேபியா , கட்டார் மற்றும் வெனிசுவேலா ஆகிய நான்கு நாடுகள் இந்த உடன்படிக்கையை எட்டியுள்ளன.

ஜனவரி மாதத்தில் செய்த எண்ணெய் உற்பத்தி அளவிலேயே தாங்கள் தங்கள் உற்பத்தியை வைத்திருக்கப்போவதாக அவை அறிவித்துள்ளன. ஆனால் மற்ற எண்ணெய் உற்பத்தியாளர்களும் இதே நிலையில் வைத்திருக்கும் பட்சத்தில்தான் இது அமுல்படுத்தப்படும்.

ஆனால் ஈரான் கடந்த மாதம் தன் மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடைகள் விலக்கிக்கொள்ளப்பட்டதை அடுத்து எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க விரும்புவதாக ஏற்கனவே தெளிவாக்கிவிட்டது.

இந்த கூட்டத்தின் முடிவுகள் தெரிய வந்ததும், எண்ணெய் விலைகள் மீண்டும் சரிந்தன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்