இலங்கையின் பல பகுதிகள் மிகவும் ஏழ்மை நிலையில் – உலக வங்கி

இலங்கையின் பல பகுதிகள் மிகவும் ஏழ்மை நிலையில் – உலக வங்கி

இலங்கையின் பல பகுதிகள் மிகவும் ஏழ்மை நிலையில் – உலக வங்கி

எழுத்தாளர் Staff Writer

17 Feb, 2016 | 8:15 am

இலங்கையின் பல பகுதிகள் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளதாக உலக வங்கி அறிக்கை வௌியிட்டுள்ளது.

நாட்டிலேயே மிகவும் வறுமை மிகுந்த மாவட்டங்களாக முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்கள் காணப்படுவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பிபிசி செய்தி வௌியிட்டுள்ளது.

யுத்தத்தின் காரணமாக வடக்கு கிழக்கு பகுதியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டுள்ள நிலையில், மலையகப் பகுதியிலுள்ள மக்கள் பல தசாபதங்களாக வறுமையின் பிடியில் வாடி வருவதாகவும் உலக வங்கி சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறித்த பகுதிகளிலுள்ள மக்களின் வாழ்வாதாரங்கள் மேம்படும் பட்சத்திலேயே தேசிய அளவில் பொருளாதாரம் மேம்படும் என உலக வங்கி தனது அறிக்கையின் மூலம் வலியுறுத்தியுள்ளது.

தெற்காசியாவின் ஏனைய நாடுகளைக் காட்டிலும் இலங்கையில் நம்பகத்தன்மையுடன் கூடிய அடிப்படை கட்டமைப்பு வசதிகளும், வலுவுள்ள மனித வளமும் உள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.

இதேவேளை இலங்கையில் போதிய முன்னேற்றம் காண கூடுதல் வாய்ப்புகளும் உள்ளதாகவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கை கடற்பரப்பில் கடல் வளங்களும் அதிக அளவில் உள்ளன எனவும் கூறும் அந்த அறிக்கை, அத்தகைய வளங்கள் மூலம் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு அரசு ஆக்கப்பூர்வமாக முனைய வேண்டும் எனக் கூறியுள்ளது.

மேலும் இலங்கை தனது வர்த்தகம் தொடர்பான கொள்கைகளை மாற்ற வேண்டும், எனவும் கல்வி மற்றும் பயிற்சிகளை அளிப்பதில் கூடுதல் முதலீடு செய்ய வேண்டும் எனவும் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்