அவுஸ்திரேலிய மக்கள் தொகை 24 மில்லியன்கள்

அவுஸ்திரேலிய மக்கள் தொகை 24 மில்லியன்கள்

அவுஸ்திரேலிய மக்கள் தொகை 24 மில்லியன்கள்

எழுத்தாளர் Staff Writer

17 Feb, 2016 | 10:20 am

அவுஸ்திரேலியாவின் மக்கள் தொகை 24 மில்லியனைத் தாண்டி விட்டது. அசாதாரண அளவு குடியேற்றமே இதற்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.

நாட்டின் மக்கள் தொகை 2013 ஆம் ஆண்டிலிருந்து ஒரு மில்லியன் என்ற அளவில் அதிகரித்து வந்துள்ளது. இது வளர்ந்த நாடுகளில் காணப்படும் மிக அதிக மக்கள் தொகை வளர்ச்சி விகிதங்களில் ஒன்றாகும்.

அவுஸ்திரேலியா திறன் படைத்த குடியேறிகளை வரவேற்கிறது ஆனால் தஞ்சம் கோருவது குறித்து மிகவும் சர்ச்சைக்கிடமான மற்றும் மிகக் கடுமையான கொள்கையை வைத்திருக்கிறது.

படகுகளில் வரும் அகதிகளைத் தடுத்து நிறுத்துவது மற்றும் அவர்களை பசுபிக் கடல் பகுதியில் உள்ள தீவுகளில் உள்ள முகாம்களில் அடைத்து வைப்பது போன்ற நடவடிக்கைகளை அவுஸ்திரேலியா எடுத்து வருகிறது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்