அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான மக்கள் கருத்தறியும் குழு இன்று புத்தளத்தில்

அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான மக்கள் கருத்தறியும் குழு இன்று புத்தளத்தில்

எழுத்தாளர் Staff Writer

17 Feb, 2016 | 7:11 am

அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக மக்களின் கருத்துக்களை கேட்டறியும் குழுவினர் புத்தளம் மாவட்டமத்தில் கருத்துக்களை கேட்டறியவுள்ளனர்.

புத்தளம் மாவட்ட செயலகத்தில் காலை 9 .30 மணி முதல் மக்களின் கருத்துக்களை கேட்டறியும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

மக்கள் கருத்தறியும் விசேட அமர்வு நாளைய தினமும் புத்தளம் மாவட்டத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த குழுவினர் நேற்றும் நேற்று முன்தினமும் யாழ் குடா நாட்டில் கருத்து கேட்டறியும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அரசியலமைப்பு சீர் திருத்தங்கள் மீதான பொதுமக்கள் யோசனைகள் கேட்டறிய 20 உறுப்பினர்களை கொண்ட குழுவொன்று உத்தேச அரசியலமைப்பு சீர்திருத்தங்களுக்கான முன்மொழிவுகளை மக்களிடமிருந்து பெற்றுக்கொள்வதற்காக அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் நியமிக்கப்பட்டது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்