வவுனியா வடக்கு பல்நோக்கு கூட்டுறவு சங்க ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

வவுனியா வடக்கு பல்நோக்கு கூட்டுறவு சங்க ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

எழுத்தாளர் Staff Writer

16 Feb, 2016 | 1:22 pm

நெடுங்கேணி வவுனியா வடக்கு பல்நோக்கு கூட்டுறவு சங்கத்தின் ஊழியர்கள் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்று முற்பகல் வவுனியா வடக்கு பல்நோக்கு கூட்டுறவு சங்க கட்டடத்திற்கு முன்பாக இந்த உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா வடக்கு பல்நோக்கு கூட்டுறவு சங்கத்தில் முறைகேடுகள் இடம்பெறுவதாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம் சுமத்தினர்.

உண்ணாவிரதப் போராட்டம் இடம்பெற்ற இடத்திற்கு வருகை தந்த பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இந்த பிரச்சினை தொடர்பில் வடமாகாண கூட்டுறவு அமைச்சர் பொ. ஐங்கரநேசனுடன் ஆலோசித்து தீர்வொன்றை வழங்குவதாக உண்ணாவிரதத்தை முன்னெடுத்தவர்களிடம் வாக்குறுதியளித்துள்ளார்.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்