புத்தளம் பிரதேசத்தில் வீசிய கடும் காற்றினால் 46 வீடுகளுக்கு சேதம்

புத்தளம் பிரதேசத்தில் வீசிய கடும் காற்றினால் 46 வீடுகளுக்கு சேதம்

புத்தளம் பிரதேசத்தில் வீசிய கடும் காற்றினால் 46 வீடுகளுக்கு சேதம்

எழுத்தாளர் Staff Writer

16 Feb, 2016 | 8:45 am

புத்தளம் பிரதேசத்தில் வீசிய கடும் காற்றினால் 46 வீடுகள் சேதமடைந்துள்ளன.

புத்தளம் முள்ளிபுரம் கிராம உத்தியோகத்தர் பிரிவில் கடும் காற்றுடன் கூடிய மழை பெய்துகொண்டிருந்தபோது 46 வீடுகள் சேதமடைந்துள்ளன.

நேற்று (15) பிற்பகல் 5 மணியளவில் இந்த வீடுகள் சேதமடைந்ததாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

மக்கள் புரம் , இல்யாஸ் தோட்டம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளிலேயே கடும் காற்று வீசியதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

கடும் காற்றினால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக அதிகாரிகளை குறித்த பகுதிக்கு அனுப்பிவைத்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் மேலும் குறிப்பிட்டார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்