பிரேசில் கால்பந்து நட்சத்திரம் நெய்மரின் சொத்துக்களை முடக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

பிரேசில் கால்பந்து நட்சத்திரம் நெய்மரின் சொத்துக்களை முடக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

பிரேசில் கால்பந்து நட்சத்திரம் நெய்மரின் சொத்துக்களை முடக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

எழுத்தாளர் Bella Dalima

16 Feb, 2016 | 3:28 pm

பிரேசிலின் கால்பந்து நட்சத்திரம் நெய்மரின் 50 மில்லியன் டொலர்கள் மதிப்புடைய சொத்துக்களை முடக்குமாறு பிரேசில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2011 முதல் 2013 ஆம் ஆண்டு வரை நெய்மர் மற்றும் அவரது குடும்பத்தினர் சார்ந்த வர்த்தகம் தொடர்பாக 16 மில்லியன் டொலர்கள் வரி ஏய்ப்பு செய்ததாக முறைப்பாடு முன்வைக்கப்பட்டது.

இதனையடுத்து, பிரேசில் நீதிமன்றம் சுமார் 50 மில்லியன் டொலர்கள் மதிப்புள்ள சொத்துக்களை முடக்க உத்தரவிட்டுள்ளது.

முடக்கப்பட்ட நெய்மரின் சொத்துக்களில் அவருக்குச் சொந்தமான ஒரு படகும் விமானமும் அடங்கும்.

கடந்த பெப்ரவரி 2 ஆம் திகதி மேட்ரிட் நீதிமன்றத்தில் நெய்மர் மற்றும் அவரது தந்தை ஆகியோரிடம் நெய்மர் பார்சிலோனா அணிக்கு மாறியதற்குக் கைமாறிய தொகை குறித்து கடும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

நெய்மரை ஒப்பந்தம் செய்ய பார்சிலோனா கிளப் சுமார் 90 மில்லியன் டொலர்கள் செலவிட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்