ஜனாதிபதிக்கும் ஜேர்மன் உயர் அதிகாரிகளுக்கும் இடையில் இன்று விசேட கலந்துரையாடல்

ஜனாதிபதிக்கும் ஜேர்மன் உயர் அதிகாரிகளுக்கும் இடையில் இன்று விசேட கலந்துரையாடல்

எழுத்தாளர் Staff Writer

16 Feb, 2016 | 1:04 pm

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜேர்மன் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (16) சில விசேட கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளார்.

ஜேர்மன் அரசின் பிரதிநிதிகள் மற்றும் இலங்கை தூதரக அதிகாரிகளினால் ஜனாதிபதிக்கு நேற்று (15) மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜேர்மன்அதிபர் ஏங்கலா மேர்கலை நாளை (17) சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் அரச தலைவர் ஒருவருக்கு 43 வருடங்களின் பின்னரே உத்தியோகபூர்வ விஜயத்திற்கு ஜேர்மன் அழைப்பு விடுத்தமை குறிப்பிடத்தக்கது.

19 ஆம் திகதி ஒஸ்றியாவிற்கு விஜயம் மேற்கொண்டு இரண்டு நாட்கள் தங்கியிருக்கவுள்ளார்.

இதன் போது அந்நாட்டின் ஜனாதிபதியுடனும் அரச பிரதிநிதிகளுடன் இரு தரப்பு கலந்துரையாடல்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்