சுன்னாகம் நீர் மாசு: உரிய முறையில் குடிநீர் விநியோகம் இடம்பெறாததால் அவதியுறும் பிரதேச மக்கள்

சுன்னாகம் நீர் மாசு: உரிய முறையில் குடிநீர் விநியோகம் இடம்பெறாததால் அவதியுறும் பிரதேச மக்கள்

எழுத்தாளர் Staff Writer

16 Feb, 2016 | 12:47 pm

சுன்னாகம் நிலத்தடி நீர் மாசடைந்துள்ளமையால் பாதிக்கப்பட்டுள்ள சுன்னாகம் தெற்கு பகுதியில் உள்ள கிராம மக்களுக்கான குடிநீர் விநியோகம் உரிய முறையில் முன்னெடுக்கப்படுவதில்லை என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் தாம் மாசடைந்த நீரையே அன்றாட தேவைகளுக்கு பயன்படுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் மக்கள் கூறுகின்றனர்.

சுன்னாகம் தெற்கு பகுதி மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினை தொடர்பில் வலி தெற்கு பிரதேச செயலாளரிடம் நியூஸ்பெஸ்ட் வினவிய போது சுன்னாகம் தெற்கு பகுதிகளுக்கான குடிநீர் விநியோகத்தை உடுவில் பிரதேச செயலகம் தனியார் அமைப்பொன்றுடன் இணைந்து முன்னெடுத்ததாவும்,குறித்த தனியார் நிறுவனத்தின் ஒப்பந்த காலம் நிறைவடைந்ததும் அவர்கள் தமது பணியினை நிறுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.

தம்மிடம் உள்ள வளங்களுக்கு அமைய தாம் குடிநீர் விநியோகத்தை மேற்கொண்டு வருவதாகவும் அதற்கு மேலதிகமான குடிநீர் விநியோகத்தை மேற்கொள்ள தம்மிடம் போதிய வளங்கள் இல்லையென வலி தெற்கு பிரதேச செயலாளர் நியூஸ்பெஸ்ட்டுக்கு குறிப்பிட்டார்.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்