கோல்டன் கீ கிரடிட் கார்ட் வழக்கு: சிசிலி கொத்தலாவலவை பிரதிவாதியாகப் பெயரிடுமாறு கோரிக்கை

கோல்டன் கீ கிரடிட் கார்ட் வழக்கு: சிசிலி கொத்தலாவலவை பிரதிவாதியாகப் பெயரிடுமாறு கோரிக்கை

கோல்டன் கீ கிரடிட் கார்ட் வழக்கு: சிசிலி கொத்தலாவலவை பிரதிவாதியாகப் பெயரிடுமாறு கோரிக்கை

எழுத்தாளர் Bella Dalima

16 Feb, 2016 | 6:01 pm

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சிசிலி கொத்தலாவலவை, கோல்டன் கீ கிரடிட் கார்ட் நிறுவனத்தில் பணத்தை வைப்பீடு செய்தவர்களால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் பிரதிவாதியாகப் பெயரிடுமாறு சட்டத்தரணி சாலிய பீரிஸ் இன்று நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.

720 கோடி ரூபாவுக்கும் அதிகமான தொகையை முறையற்ற விதத்தில் கையாண்டமை உள்ளிட்ட 91 குற்றச்சாட்டுகளின் கீழ், சிசிலி கொத்தலாவல கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த குற்றச்சாட்டுகளின் கீழ், கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கின் ஆறாவது பிரதிவாதியாகவிருந்த நிலையில், வெளிநாடு சென்றிருந்த சிசிலி கொத்தலாவல, மீண்டும் நாடு திரும்பிய பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி சாலிய பீரிஸ் நீதிமன்றத்தில் அறிவித்தார்.

ஆகவே, சிசிலி கொத்தலாவலவை இந்த வழக்கின் பிரதிவாதியாகப் பெயரிட்டு, பெப்ரவரி 23 ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு சட்டத்தரணி நீதிமன்றத்திடம் கேட்டுக்கொண்டார்.

பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் சந்தர்ப்பத்தில் சிசிலி கொத்தலாவல சார்பாக தாம் பிணைக்கோரிக்கையை முன்வைப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் சட்டத்தரணி சாலிய பீரிஸ் சுட்டிக்காட்டினார்.

இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட மேல் நீதிமன்ற நீதிபதி மணிலால் வைத்தியரத்ன, சிசிலி கொத்தலாவலவை பெப்ரவரி 23 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவு பிறப்பித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்